சிறப்புச் செய்தி

முரசு புயல்: 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

5 hours ago 17 பார்வைகள்
முரசு புயல்: 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி மழை பெய்து வருகிறது. இரவு முழுக்க விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இதுதவிர முரசு புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ. 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் 'முரசு' புயல் உருவாகியுள்ளது. வங்கக்கடலில் வடமேற்கு திசையில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் முரசு புயல் சென்னையில் இருந்து வடக்கு வடகிழக்கில் 260 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெற்று புயல் நகரக்கூடிய வேகம் குறைந்து வருகிறது.

முரசு புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி கனமழை பெய்து வருகிறது. மேலும், இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், கனமழை மற்றும் முரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னைமற்றும் திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவ. 02) விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்