சிறப்புச் செய்தி

புதுக்கோட்டைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்

5 hours ago 15 பார்வைகள்
புதுக்கோட்டைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்

புதுக்கோட்டையில் நடைபெறும் விழாவில் ரூ.23 கோடியில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்து ரூ.100 கோடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், இவ்விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் நீலாங்கரை வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்றடையும் முதலமைச்சர் விஜய், பின்னர் அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டைக்கு செல்கிறார்.

புதுக்கோட்டைக்கு முதலமைச்சர் விஜய் வந்தவுடன் த.வெ.க. நிர்வாகிகள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து திறந்தவெளி வாகனம் மூலம் மக்களை சந்திக்கிறார். சுமார் 4 கிலோ மீட்டர் பயண தூரத்திற்கு பிறகு மதியம் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தடைகிறார்.

முதலமைச்சரின் வருகையையொட்டி புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்