சிறப்புச் செய்தி

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணியில் மாற்றம்- ரவீந்திரா, சேப்மேன் விலகல்

1 hour ago 11 பார்வைகள்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணியில் மாற்றம்- ரவீந்திரா, சேப்மேன் விலகல்

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அடுத்து 5 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. முதல் ஆட்டம் நாளை மறுநாள் ஆக்லாந்தில் நடக்கிறது. ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து வீரர்கள் மார்க் சேப்மேன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் விலகியுள்ளனர். காயத்தில் இருந்து முழுவதுமாக குணம் அடையாததால் அவர்கள் ஆடவில்லை.

டிம் ஷெய்பெர்ட் தொடர் முழுவதும் இடம் பெற்று உள்ளார். முதலில் அவர் கடைசி 2 போட்டிக்கான அணிக்கு மட்டுமே தேர்வானார். கடைசி 20 ஓவரில் அதிரடியாக ஆடியதால் இந்த வாய்ப்பு கிடைத்து உள்ளது.

நிக்கோலஸ் முதல் 3 ஆட்டத்துக்கான அணியிலும், பாக்ஸ் கிராப்ட் கடைசி 2 போட்டிக்கான அணி யிலும் தேர்வாகி உள்ளனர்.

20 ஓவர் தொடரில் பாதியில் விலகிய வேகப்பந்து வீரர் மேட் ஹென்றி அணியில் இணைகிறார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான மேத்யூ பிஷர் தொடர் முழுவதும் ஆடுகிறார். முன்னதாக அவர் கடைசி 2 ஆட்டத்துக்கான அணியில் மட்டுமே இடம்பெற்றார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்