சிறப்புச் செய்தி

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

5 hours ago 13 பார்வைகள்
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை மாதம் முடிவதற்குள் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடுநிலையான ஒருவர் கோவில் நிர்வாகம் தரப்பில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தூணில் தீபம் ஏற்றுமாறு முன்பு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை வாசித்து வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்படாதது வேதனை அளிக்கிறது. உத்தரவுகள் மெத்தனமாக கையாளப்படும் பொழுது நாங்கள் அதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம்.

திருப்பரங்குன்றம் தீப சூழலை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டது.இந்த சூழலை இரும்புக்கரம் கொண்டு கையாளாவிட்டால் அது அரசியலமைப்புச் சீர்குலைக்கு வழிவகுக்கும்.

உயர் பதவியில் இருப்பவராக இருந்தாலும், நீதித்துறை நீரோட்டத்தை மாசுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் சகித்துக்கொள்ள மாட்டோம்.

நீதிமன்றத்தின் உத்தரவு என்பது பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அல்ல என உச்சநீதிமன்றம் திட்டவட்டம். நீதிமன்றம் உத்தரவு என்பது அதிகாரிகள், ஒவ்வொரு சட்டபூர்வ நிறுவனத்தையும் கட்டுப்படுத்தும்.

உச்சநீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படாததை பார்க்கும்போது ஐயோ என்று சொல்ல தோன்றுகிறது.

அரசியலமைப்பு ஆணையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் உறுதியாக ஒடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் மேலோட்டமாக நிர்வாகக் குழப்பம் நிலவுகிறது. மதுரை மாவட்டத்தில் நிர்வாக பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் நடத்தை நிர்வாக குழப்பம் எழுந்துள்ளதா காட்டுகிறது.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை மாதம் முடிவதற்குள் தீபம் ஏற்ற வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது.

திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றத்தில் உத்தரவு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றறே மீறியதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் நாளை கார்த்தை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து தீபத்தை எடுத்துக்கொண்டு போய் தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம்

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்