சிறப்புச் செய்தி

இஸ்ரேல் மீது அதிநவீன டிரோன் தாக்குதலை நடத்தும் ஹிஸ்புல்லா.. அமெரிக்காவுடன் ராணுவ பயிற்சி மேற்கொண்ட இஸ்ரேல்

5 hours ago 13 பார்வைகள்
இஸ்ரேல் மீது அதிநவீன டிரோன் தாக்குதலை நடத்தும் ஹிஸ்புல்லா.. அமெரிக்காவுடன் ராணுவ பயிற்சி மேற்கொண்ட இஸ்ரேல்

தெற்கு லெபனான் பகுதியில் ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்பாக ஹிஸ்புல்லா செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் நடத்தி வரும் தாக்குதல்களை, நவீன ஜாமிங் பாதுகாப்பு வசதிகள் மூலம் இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருகிறது.

இதற்கிடையில் சமீபகாலமாக ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் ராணுவம், அதிநவீன டிரோன்களை போரில் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ரஷிய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன டிரோன்கள் மூலம், தற்போது இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த வகையான டிரோன் தாக்குதலை தடுப்பதற்கு போதுமான ஜாமிங் பாதுகாப்பு வசதிகள் இஸ்ரேல் ராணுவத்திடம் இல்லாததால், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவுடன் இணைந்து டிரோன் பாதுகாப்பு கூட்டு பரிசோதனையை இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ளது.

இந்த ராணுவ கூட்டு பயிற்சியில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்களை பயன்படுத்தி, டிரோன்களை கட்டுப்படுத்தும் கூட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்