ஆவின் நெய்யை தொடர்ந்து ஆவின் வெண்ணெயின் விலையும் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் பால், ஆவின் நெய் விலை உயர்வை தொடர்ந்து, ஆவின் நிறுவனம் தயாரிக்கும் வெண்ணெயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு கலக்காத வெண்ணெய் 500 கிராம், ரூ. 250 விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன் விலை ரூ. 260 உயர்த்தப்பட்டுள்ளது.
உப்பு கலக்காத வெண்ணெய் 100 கிராம் ரூ. 52 இருந்த நிலையில், ரூ. 55 அதிகரிக்கப்பட்டுள்ளது. உப்பு கலக்கப்பட்ட 500 கிராம் ஆவின் வெண்ணெயின் விலை ரூ. 265 ஆகவும், 100 கிராம் வெண்ணெயின் விலை ரூ. 55 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
200 கிராம் எடை கொண்ட வெண்ணெய் கட்டி ரூ. 130க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ. 140 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
சிறப்புச் செய்தி
ஆவின் பால், நெய் தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு!
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
தோழி விடுதி குறித்து பாராட்டிய உலக வங்கி - மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி!
9 hours ago
ஐசிசி தரவரிசை: ஜெட் வேகத்தில் முன்னேறி டாப் 10 பட்டியலில் நுழைந்த ஷ...
9 hours ago
அதிக பயணிகள்: டாப் 10-ல் இடம் பிடித்த தாம்பரம் ரெயில் நிலையம்?
10 hours ago