அதிமுக, தேமுதிக இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று தேமுதிக புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது.
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புரட்சி பாரதம் கட்சிக்கு விழுப்புரம் தொகுதியும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு தேனி அல்லது மயிலாடுதுறை தொகுதி ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவை பொறுத்தவரை கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர் உள்ளிட்ட 4 தொகுதிகள் ஒதுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணியில் பா ம க இடம் பெறாததால் தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், தேமுதிக கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதா என்பதற்கு இன்று விடை தெரிந்துவிடும்.
சிறப்புச் செய்தி
அதிமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடம் தெரியுமா.?
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
அன்புள்ள சுஹாஸ் பிரதர்...'Hide & Silk' படத்திற்கு வாழ்த்து தெரிவித்...
9 hours ago
டர்பன் டெஸ்டில் தப்பிக்குமா தென்ஆப்பிரிக்கா? 421 ரன்கள் வெற்றி இலக்...
9 hours ago
டி20-யில் அறிமுகம்: கம்பீர், ஷ்ரேயாஸ் அய்யர் சொன்னது என்ன? உண்மையை ...
9 hours ago