Tamil News & POLLING

 

வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சிக்காக புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்

2 hours ago 29 மார்ச் 2026 05:28 AM | views : 29

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாததால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. ஏப்ரல் 6-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட ஆயத்தமாகி வருகிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.


ஆளுங்கட்சியான தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ்-அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் சசிகலா ஆகியோர் தலைமையிலான கூட்டணியில் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.


இதற்கிடையே, சட்டசபை தேர்தலை சந்திக்க விஜய்யின் த.வெ.க. தீவிரமாகியுள்ளது. 234 தொகுதிகளிலும் த.வெ.க. தனித்து களம் காண்கிறது. இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்க உள்ளார். இதற்கான கூட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடக்க உள்ளது.


இந்த கூட்டத்தில் பங்கேற்க தவெக தலைவர் விஜய் தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY சென்னை அதிமுக CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக AMMK AIADMK ANNAMALAI TAMIL NADU MK STALIN ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் ADMK PMK பாமக பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் கனமழை கோவை இந்திய அணி CONGRESS காங்கிரஸ் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION சீமான் COIMBATORE INDIAN CRICKET TEAM கொலை KEERTHY SURESH திருமாவளவன் பிரதமர் மோடி AJITH கைது அமமுக வடகிழக்கு பருவமழை மதுரை NELLAI THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் OPS தேவர் நெல்லை தென்காசி TAMIL ACTRESS தீபாவளி ASSEMBLY ELECTIONS நடிகை SEEMAN ஓபிஎஸ் கீர்த்தி சுரேஷ் MADURAI திருப்பரங்குன்றம் CSK PRIME MINISTER MODI கள்ளக்காதல் SURIYA டிரெண்டிங் NORTHEAST MONSOON விடுமுறை பாலியல் தொல்லை அஜித் டாப் நியூஸ்