POLLING 📊 TN ELECTION 2026

 

இல்லத்தரசி கூப்பன் ரூ.8,000 யாருக்கு எல்லாம் கிடைக்கும்? - கனிமொழி எம்.பி. விளக்கம்

1 hour ago 30 மார்ச் 2026 07:27 AM | views : 69

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கைக்குழு தலைவர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தி.மு.க.வின் கடந்த தேர்தல் அறிக்கை போலவே, இந்த தேர்தல் அறிக்கையும் நாட்டிற்கே வழிகாட்டும். 80,000 மக்களின் கருத்துகளைப் பெற்று தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்துள்ளோம்.


தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை காப்பியடிக்கப்பட்டதாக கூறுவது வேடிக்கையானது. கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் 505-இல் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ஆகியோருக்கு கணக்கு தெரிந்த யாராவது வகுப்பு எடுக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தாத வாக்குறுதிகளை பட்டியலிட்டால், அது நீண்டுக்கொண்டே போகும்.


எடப்பாடி பழனிசாமிக்கு யாராவது சதவீத கணக்கை சொல்லி கொடுங்கள். திமுக தொடங்கிய மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அதிமுகதான் காப்பி அடித்துள்ளது. நாங்கள் தொடங்கிய உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.2,000 என அறிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.


உலகத்தில் உள்ள பொருளாதார நிபுணர்கள் பலரும், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மக்களின் கையில் பணம் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்தால்தான் பொருளாதாரம் உயரும். இதை அறியாமல் "இலவசம்... இலவசம்" என்ற வார்த்தையை பயன்படுத்தி சிலர் அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்; அரசியல் செய்கிறார்கள்.


பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றத்தை எப்.ஐ.ஆர். கூட பதிவிட முன்வராமல் குற்றவாளிகளை காப்பாற்ற அத்தனை முயற்சிகளை செய்தது அதிமுக. இந்த ஆட்சியில் பெண்களுக்கு எதிராக ஒரு குற்றம் நடந்தால் குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சியில் குற்றம் நடந்தால் பாரபட்சமின்றி உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இல்லத்தரசிகளுக்கான ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் எந்த அடிப்படையில் வழங்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு “இதை முதல்-அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார். வருமான வரி செலுத்தாத பெண்களுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். பல பேர் வீட்டில் பிரிட்ஜ் இருக்கலாம் அவர்களுக்கு , என்ன பொருள் தேவைப்படுகிறதோ அதை இந்த கூப்பன் மூலமாக வாங்கிக் கொள்ளலாம் எனவும் அவர் விளக்கியுள்ளார் என்று கூறினார்.



பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI MK STALIN TAMIL NADU ANBUMANI RAMADOSS ADMK எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN AIADMK டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் PMK முக ஸ்டாலின் பாமக ரஜினிகாந்த் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் CONGRESS இந்திய அணி காங்கிரஸ் கனமழை கோவை சீமான் கைது COIMBATORE சட்டசபை தேர்தல் PARLIAMENT ELECTION தமிழ்நாடு UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை பிரதமர் மோடி அமமுக தீபாவளி AJITH தென்காசி NELLAI ஓபிஎஸ் THIRUMAVALAVAN வன்னியர் நெல்லை TAMIL ACTRESS தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் கொரோனா பாலியல் தொல்லை நடிகை SEEMAN NORTHEAST MONSOON கள்ளக்காதல் அஜித் OPS டாப் நியூஸ் டிரெண்டிங் SURIYA தூத்துக்குடி விடுமுறை CSK திருப்பரங்குன்றம் மதுரை MADURAI PRIME MINISTER MODI