எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை

சென்னை,

சட்டசபை தேர்தல் தோல்வியால், அ.தி.மு.க.வில் பெரும் பூகம்பமே வெடித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் தனி அணி உருவாகி உள்ளது.

தேர்தல் தோல்விக்கு பின்னர் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி மோதல் வெடித்தது. இதையடுத்து நடந்த சம்பவங்களால் அக்கட்சி இரண்டாக உடைந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடி வுக்கு எதிராக, த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க சி.வி.சண்மு கம், வேலுமணி தலைமையிலான அணி முன்வந்தது. இதை அவர்கள் பகிரங்கமாக தெரிவித்தனர்.

சட்டசபையில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம் அ.தி.மு.க.வில் புயலை கிளப்பியதையடுத்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்பட 26 பேரின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதோடு புதிதாக அவர் மாவட்ட செயலாளர்களையும் நியமித்துள்ளார்.

இந்த நிலையில், தவெக அரசுக்கு ஆதரவளித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகளை பறித்த நிலையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel