Tamil News & POLLING

 

ஆம் ஆத்மி பெண் எம்.பி புகார் மீது 3 நாட்களில் நடவடிக்கை - மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

1 year ago 13 மே 2024 12:29 PM | views : 133
ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் (பி.ஏ) பிபவ் குமார், இன்று காலை கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து தன்னை தாக்கியதாக டெல்லி போலீசிடம் முறையிட்டார். இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் இல்லத்துக்கு விரைந்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து முதற்கட்ட அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி காவத்துறை, இன்று காலை 9.34 மணியளவில் கெஜ்ரிவாலின் இல்லத்திலிருந்து தங்களுக்கு 2 முறை போன் அழைப்பு வந்ததாகவும் ஆனால், சம்பவ இடத்துக்கு சென்றபோது அங்கு ஸ்வாதி இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும் இதுதொடர்பாக தங்களுக்கு இன்னும் எழுத்துபூர்வமான எங்த புகாரும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த புகார் குறித்து விசாரித்து இன்னும் 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள டெல்லி பாஜக, கெஜ்ரிவால் சிறையில் இருந்த போது நாட்டிலேயே இல்லாத ஸ்வாதி மீது தற்போது நடந்துள்ள தாக்குதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AIADMK MK STALIN AMMK எடப்பாடி பழனிசாமி ADMK TAMIL NADU TTV DHINAKARAN டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் PMK காங்கிரஸ் சீமான் உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS CONGRESS தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM கனமழை இந்திய அணி பாமக தமிழகம் ரஜினிகாந்த் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி UDHAYANIDHI STALIN கைது NELLAI அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI தீபாவளி SEEMAN சட்டசபை தேர்தல் KEERTHY SURESH கொலை வடகிழக்கு பருவமழை அமமுக தமிழ்நாடு TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM THOOTHUKUDI கள்ளக்காதல் வன்னியர் திருநெல்வேலி மதுரை COIMBATORE கோவை நெல்லை கொரோனா ELECTION COMMISSION தென்காசி SURIYA தேவர் OPS பாலியல் தொல்லை AJITH விடுமுறை கீர்த்தி சுரேஷ் நாம் தமிழர் கட்சி 2024 T20 WORLDCUP RAIN திருமாவளவன் MADURAI நாடாளுமன்ற தேர்தல் SENGOTTAIYAN ஓபிஎஸ் THIRUMAVALAVAN டிரெண்டிங் டாப் நியூஸ் TAMIL CINEMA திருப்பரங்குன்றம் நயினார் நாகேந்திரன் தமிழக அரசு NORTHEAST MONSOON ASSEMBLY ELECTIONS