பெப்சி உமா இப்ப என்ன பண்ணிட்டிருக்கார் தெரியுமா?

Views : 462

பெப்சி உமாவை ஞாபகம் இருக்காங்க.. அதெப்படிங்க மறக்க முடியும்.. ஒவ்வொருவரையும் மரியாதையாக, அன்பாக அவர் அழைத்துப் பேசிய காலத்தை மறக்க முடியுமாங்க.

பெப்சி உமாவை யாராலும் மறந்து விட முடியாது. தமிழ்த் தொலைக்காட்சிகளின் முதல் நட்சத்திர தொகுப்பாளினி அவர்தான். அவர் நடத்தியது ஒரு டெலிபோன் நிகழ்ச்சிதான்.

ஆனால் அந்த நிகழ்ச்சியின்போது அதில் அவர் உடுத்தி வரும் புடவைகளை பார்ப்பதற்கு பெண்களும், அவரது சிரிப்புக்கு ஆண்களும் காத்துக் கிடந்தார்கள். அப்படி ஒரு கிரேஸ் அந்தக் காலத்தில் உமா மீது இருந்தது.

சென்னையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி 1974 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரின் அப்பா ஒரு வக்கீல். அம்மா நடன கலைஞர் மற்றும் ஓவியர். இவர் எம்பிஏ முடித்தவர். இவரின் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி தூர்தர்ஷனில் ஒளிபரப்பான "வாருங்கள் வாழ்த்துவோம் "என்ற நிகழ்ச்சிதான். இதில் 104 ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.


தூர்தர்ஷனைத் தொடர்ந்து சன் டிவியில் பணியாற்ற தொடங்கினார். அங்கு பத்து வருடங்களுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார். சன் டிவியில் ஸ்டார் ஷோ என்ற நிகழ்ச்சியை தயாரித்து கங்கை அமரன் அவருடன் இணைந்து தொகுத்து வழங்கியும் உள்ளார். இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய போது இவருக்காக தமிழகத்திலேயே முதல் முதலாக கட்டவுட் வைக்கப்பட்டது. உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி இவருக்கு பெரும் பெயர் வாங்கித் தந்தது.

தொகுப்பாளி க்கு முதன்முதலாக கட்-அவுட் வைக்கப்பட்டது இவருக்கு தான் .அந்தக் காலக்கட்டங்களில் குஷ்புக்கு இணையாக இவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள். அவர் ஜெயா டிவியில் ஆல்பம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அதில் திரைப்பட நடிகர் நடிகைகளையும் முன்னணி பிரமுகர்களையும் அவர்களின் வாழ்க்கைக் கதைகளை அவர்களின் நேர்காணல் மூலம் மக்களுக்கு நிறைய சுவாரசியமான கதைகளை தெரியப்படுத்தினார் .

நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஆல்பம் நிகழ்ச்சி மூலமாக மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார். தற்போது பெப்சி உமா ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் கட்டிடத் துறை தொடர்பான ஒரு சர்வதேச நிறுவனத்தின் தமிழ்நாட்டு பிரிவிற்கு அதிகாரியாக இருக்கிறார். பல்வேறு சேனல்களில் அவரை மீண்டும் நிகழ்ச்சி நடத்த அழைத்தபோது மறுத்து விட்டார். சும்மா அரட்டை அடிக்கும் நிகழ்ச்சியில் தோன்ற விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.

ஆனாலும் தனக்கு புகழ் தேடிக் கொடுத்த சின்னத்திரையை மறந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். புதிய கான்செப்ட்டுடன் ஒரு நல்ல நிகழ்ச்சி அமைந்தால் மீண்டும் சின்னத்திரைக்கு வரும் ஐடியா இருக்கிறதாம். உமாவிற்கு தற்போது தனது குடும்பம் தனது வேலை என்று ஒரு நல்ல குடும்பத் தலைவியாக தனது கடமைகளை செய்துவருகிறார் நம்ம பெப்சி உமா. சீக்கிரம் ஏதாவது சூப்பர் நிகழ்ச்சி மூலம் வாங்க உமா மேடம்.. காத்திருக்கிறோம்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp