தற்கொலை செய்து கொண்ட இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹர்சிங்!

Views : 362

இருட்டுக் கடை உரிமையாளர் ஹரிசிங் ரொம்பவே சாதுவான நபர். யாரிடமும் அதிர்ந்துகூட பேச மாட்டார். அவருக்குக் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதும் மிகுந்த அச்சமடைந்துள்ளார்.

நெல்லையின் அடையாளங்களுள் ஒன்றாக இருப்பது, இருட்டுக் கடை அல்வா. நெல்லையப்பர் கோயிலின் எதிரில் எந்தவிதமான விளம்பரப் பலகையும் இல்லாமல் 50 வாட்ஸ் குண்டு பல்ப் வெளிச்சத்தில் இருட்டுக் கடையில் வியாபாரம் நடக்கும்.


பிற கடைகளின் அல்வாவை விடவும் இருட்டுக் கடை அல்வாவின் சுவை தனியாக இருக்கும். அதனால் மாலை 5 மணிக்குத் தொடங்கி 8 மணி வரை மட்டுமே நடக்கும் கடையில் அல்வா வாங்குவதற்குக் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.


நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நெல்லையில் செயல்பட்டு வந்த இருட்டுக்கடையின் உரிமையாளராக ஹரிசிங் என்பவர் இருந்தார். 75 வயது முதியவரான அவர் சாதுவான குணம் கொண்டவர். யாரிடமும் அதிர்ந்துகூட பேச மாட்டார்.

இருட்டுக் கடை உரிமையாளர் ஹரிசிங்

கடந்த சில தினங்களாகக் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்ட அவருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ‘பாசிட்டிவ்’ என ரிசல்ட் வந்துள்ளது. அதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாகத் தெரிகிறது. குடும்பத்தினருக்குத் தொல்லை கொடுத்துவிட்ட சோகம் ஒரு பக்கம், கொரோனா குறித்த அச்சம் மறுபக்கம் என மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார்.

கொரோனா பாதிப்புக்குள்ளான ஹரிசிங்கை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், மிகுந்த மன நெருக்கடிக்கு உள்ளான இருட்டுக்கடை உரிமையாளர் ஹர்சிங் இன்று தனியார் மருத்துவமனையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார்.

இதனிடையே, அவரது மருமகன் கோபால் சிங் என்பவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கடையில் வேலை செய்தவர்கள் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுப் பரிசோதனை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்கொலை செய்து கொண்ட இருட்டுக்கடை உரிமையாளர் ஹர்சிங்!


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp