மலையேற்றத்திற்கு ஏதுவாக எவரெஸ்ட் உள்பட 14 சிகரங்களை திறந்தது நேபாளம்

Views : 51

இமய மலைத்தொடரில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் நாடான நேபாளத்தில் எவரெஸ்ட் உள்பட 14 உயர் சிகரங்கள் உள்ளன. இந்த சிகரங்களில் மலையேற்றம் பிரபலம். மலையேற்றம் மூலம் பல மில்லியன் டாலர் கணக்கில் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை பெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் பாதிப்பை சந்தித்தது.

நேபாளத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 19,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, தற்போது சுற்றுலா நடவடிக்கைகளுக்காக சிகரங்கள் திறக்கப்படுவதாக சுற்றுலாத்துறை இயக்குனர் மீரா ஆச்சார்யா தெரிவித்துள்ளார். மேலும், இலையுதிர் காலத்தில் மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் இலையுதிர் காலம் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை ஆகும்.

வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எத்தனை நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும், பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் தயார் செய்து வருவதாகவும் மீரா தெரிவித்தார்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp