மளிகை பொருட்கள் வழங்க கடைக்காரர் - பரிதவிக்கும் இஸ்லாமியர்கள்

Views : 63

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள அய்யாக்கோட்டையூரை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் கோவை, அருப்புக்கோட்டை பகுதியில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை தங்களது கிராமத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

அது போன்று கடந்த மாதம் 23-ம் தேதி வைப்பார் பள்ளி வாசலில் நடைபெற்ற விழாவிற்கு வந்து விட்டு தங்களது கிராமத்திற்கு வந்துள்ளனர். அதற்குள்ளாக கொரோனா ஊரடங்கு அமுல் படுத்தப்பட்ட காரணத்தினால் அவர்களால் ஊருக்கு செல்ல முடியாமல், சொந்த ஊரில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.பெண்கள், சிறு குழந்தைகள் என மொத்தம் 43 பேர் அந்த கிராமத்தில் தங்கி உள்ளனர். அனைவரும் வெளியூரில் இருப்பதால் அங்குள்ள வீடுகள் பரமரிப்பு செய்யப்படாத காரணத்தில் பள்ளி வாசல் கட்டிடத்தில் தங்கியுள்ளனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த பணத்தினை வைத்து பொருள்களை வாங்கி சாப்பிட்டு வந்த நிலையில் பணம் தீர்ந்த நிலையில் அருகில் உள்ள சிலரிடம் உதவி கேட்டுள்ளனர். அவர்களும் தங்களால் இயன்ற உதவியை செய்த நிலையில் ஊரடங்கு நீண்டு கொண்டே போவதால் யாரிடமும் உதவி கேட்க முடியாத நிலையில் உணவின்றி தவித்து வருகின்றனர். அரசு அதிகாரிகள் வந்து பார்த்து விசாரணை நடத்தி சென்றதாகவும், வேறு எதுவும் உதவி செய்யவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


மேலும் இவர்கள் இஸ்லாமிய மக்கள் என்பதால் கடைகளில் பொருள்கள் வழங்குவதற்கு தயக்கம் காட்டுவதாகவும், சிறு குழந்தைகளுக்கு பால் வாங்க முடியவில்லை என்றும், கடுங்காப்பி(வறக்காப்பி) போட்டு கொடுத்து குழந்தைகளின் பசியை போக்கி வருவதாகவும், இதில் உள்ள முதியவர்களுக்கு, சிறுவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டால் மருந்து கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


தங்கள் ஊரில் இருந்த கொண்டு வந்த ஆடைகள் கூட கிழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா நோய் தாக்கி உயிர் இழப்பதை விட தாங்கள் பட்டினியால் உயிர் இழந்து விடுவோம் என்பதால் தங்களை, அரசு தங்களது பகுதியில் கொண்டு போய் விட்டால் உயிர் பிழைத்து கொள்வோம் என்று வேதனையுடன் கூறுகின்றனர்.

இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பேசிய போது, 43 பேர் இந்த கிராமத்திற்கு வந்த நாள் முதல் கவனித்து வருவதாகவும், உணவு கிடைக்கவில்லை என்றால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஊருக்கு திருப்பி அனுப்பவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தி விட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp