சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் மும்பை போலீஸ் ஒன்றுமே செய்யவில்லை: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

Views : 43

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆனால், எந்தவொரு தற்கொலை கடிதமும் அவரது இல்லத்தில் சிக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற வற்புறுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் சுஷாந்த்தின் தந்தை கே.கே. சிங் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்தார்.

கே.கே. சிங் தனது புகாரில் கடந்த 2019-ம் ஆண்டு சுஷாந்த் பாலிவுட்டில் நல்ல நிலையில் இருக்கும்போது ரியா சகர்போர்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என் மகனிடம் அவர் வாழ்ந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக அவரிடம் கூறி அவரை அந்த வீட்டை காலி செய்யுமாறும் கூறியதாகவும், இது அவரது மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறினார்.

மேலும் சுஷாந்த் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் அவருக்கு தொடர்பே இல்லாத ஆட்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், சுஷாந்த்தின் லேப்டாப், பணம், கிரெடிட் கார்டுகள், பின் நம்பர் ஆகியவற்றை ரியா குடும்பத்தினர் திருடிவிட்டதாகவும் கே.கே. சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரையடுத்து ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது ராஜீவ் நகர் போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

இதனால் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு சூடுபிடித்துள்ளது. பீகார் போலீசார் ரியா சக்ரபோர்த்தியை கைது செய்ய மும்பை வந்துள்ளனர். ஆனால் மும்பையில் ரியா இருக்கும் அவரது இடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த வழக்கை மும்பை போலீசார் சிறப்பான முறையில் விசாரிப்பார்கள் என்ற மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தற்போது வழக்கை விசாரிப்பதில் பீகாருக்கும, மகாராஷ்டிராவிற்கும் இடையில் ஈகோ பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்நிலையில் மும்பை போலீஸ் மீது மத்திய மந்திரி  ஆர்.கே. சிங் குற்றம்சாட்டியுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு குறித்து மத்திய மந்திரி ஆர்கே சிங் கூறுகையில் ‘‘மும்பை போலீஸ் இந்த வழங்கில் ஒன்றுமே செய்யவில்லை. விளம்பரத்திற்காக மக்களை விசாரிக்கிறார்கள். எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. யாரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. தற்போது பீகார் பொலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மக்களின் சிபிஐ விசாரணை வேண்டுகோள் நியாயமானது. நானும் இந்த வேண்டுகோளை உத்தவ் தாக்கரேவிடம் எடுத்துச் சென்றேன். அவர் இதற்கு ஆதரவாக இல்லை. நீதி நிலையிலிருந்து சிபிஐ விசாரணை சிறப்பாக இருக்கும். சுஷாந்த் சிங் குடும்பமும் அதைத்தான் விரும்புகிறது’’ என்றார்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp