48 நாட்கள் சிகிச்சை... தொடர்ந்து 20 முறையும் கொரோனா பாசிட்டிவ்... 21 முறை நெகட்டிவ்.. அசத்திய கேரளா

Views : 1646

கடந்த 48 நாட்களில் 20 முறை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்த பெண்ணுக்கு கடந்த இரண்டு பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ள சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி என்ற கிராமத்தை சேர்ந்த ஷெர்லி அப்ரகாம் (62) என்ற பெண் கொரோனா அறிகுறியுடன் கடந்த மார்ச் 8-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஷெர்லியின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர் கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பொதுவாக கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் 15 முதல் 20 நாட்களில் வைரசில் இருந்து முழுமையாக குணமடைவது வழக்கம். ஆனால், ஷெர்லியின் விவகாரம் சற்று வித்தியாசமானது.

கோப்பு படம்

மார்ச் 8-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு இத்தனை நாட்களில் சிகிச்சையின் போது மொத்தம் 20 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஒவ்வொரு முறை பரிசோதனை செய்யும் போதும் கொரோனா பாசிட்டிவ் என்றே முடிவுகள் வந்தது. அதாவது 20 முறை நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா பாசிட்டிவ் என்றே முடிவு வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ஷெர்லிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மாற்றம் கொண்டு வந்தனர்.

இதையடுத்து, 20 முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என வந்த ஷெர்லி அப்ரகாமிற்கு கடந்த இரண்டு முறை (21, 22-வது முறைகள்) நடத்தபட்ட பரிசோதனை முடிவுகள் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதால் மருத்துவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

21-வது முறை நடத்தபட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என முடிவுகள் வந்தது. ஆனாலும், மருத்துவர்கள் ஷெர்லிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று) நடத்தப்பட்ட 22-வது பரிசோதனையிலும் ஷெர்லிக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த மருத்துவர்கள் ஷெர்லியை கொரோனா வார்டில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

20 முறை கொரோனா பாசிட்டிவ் என வந்த பெண் 48 நாட்கள் கேரள மருத்துவ ஊழியர்கள் மேற்கொண்ட தொடர் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp