வடகொரியா அதிபர் கிம் ஜோங் உயிருடன்தான் இருக்கிறார்! வடகொரியா ஊடங்கங்கள்

Views : 751

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் நேற்று காலை தென்னாபிரிக்க அதிபர் சிரில் ராமபோஷாவிற்கு எழுதிய கடிதம் ஒன்றை வடகொரியா ஊடங்கங்கள் வெளியிட்டுள்ளது. கிம் ஜோங்கிற்கு எதுவும் ஆகவில்லை என்பதை உணர்த்துவதற்காக வடகொரியா ஊடங்கங்கள் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உடல் நிலை குறித்து கடந்த ஒரு வாரமாகவே நிறைய செய்திகள், வதந்திகள் வெளியாகி வந்தது. அவர் மிக மோசமான உடல்நிலையுடன் இருப்பதாக அமெரிக்கா செய்தி ஊடகமான சிஎன்என்உட்பட பல்வேறு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தது.

கிம் ஜோங் உன்னுக்கு கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவரின் உடலின் மோசமானதாக கூறப்பட்டது. வடகொரியாவின் இருக்கும் வோன்சோன் நகரத்தில் கிம் இருப்பதாக செய்திகள் வந்தது. அங்கு கிம் குடும்பத்திற்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று இருக்கிறது.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் நேற்று காலை தென்னாபிரிக்கா அதிபர் சிரில் ராமபோஷாவிற்கு எழுதிய கடிதம் ஒன்றை வடகொரியா ஊடங்கங்கள் வெளியிட்டுள்ளது. கிம் ஜோங்கிற்கு எதுவும் ஆகவில்லை என்பதை உணர்த்துவதற்காக வடகொரியா ஊடங்கங்கள் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளது. நேற்று தென்னாபிரிக்காவின் சுதந்திர நாள் ஆகும்.

நேற்று தென்னாபிரிக்காவில் அந்த நாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவின் சுதந்திர நாளுக்காக கிம் ஜோங் உன் இந்த கடித்தை எழுதி உள்ளதாக வடகொரியா ஊடங்கங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த கடிதத்தையும் வெளியிட்டுள்ளது. தென்கொரியாவின் வளர்ச்சியில் தென்னாப்பிரிக்கா பெரிய பங்கு வகித்துள்ளது. இரண்டு நாட்டின் வளர்ச்சி மிகவும் முக்கியம்.

இந்த கடிதத்தின் உண்மைதன்மை குறித்தும் எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. அவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக் இன்னும் வடகொரிய ஊடங்கங்கள் நிறைய ரகசியம் காத்து வருகிறது. அதிகாரபூர்வமாக எந்த விதமான தகவலையும் இன்னும் வடகொரியா வெளியிடவில்லை. வடகொரியா அதிபர் உயிர் குறித்து நிறைய செய்திகள், தகவல்கள் உலவிய வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் அவர் எழுதியதாக இரண்டு கடிதங்கள் உலவ தொடங்கி உள்ளது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp