சென்னையில் அறிகுறி இல்லாமல் அதிகம் பேருக்கு பரவும் கொரோனா!

Views : 125

சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 5 நாட்களில் மட்டும் சென்னயில் 558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஏப்ரல் 19-ம் தேதி முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 19-ம் தேதியில் இருந்து இன்று வரை தமிழகத்தில் 1,049 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் மட்டும் 797 பேர் ஆவர். அதாவது கடந்த 13 நாட்களில் ஒட்டுமொத்த தமிழகத்தின் பாதிப்பில், சென்னையின் சதவீதம் என்பது 74% ஆகும்.

ஊரடங்கு அமலில் உள்ள இக்காலகட்டத்தில் குறிப்பாக கடந்த 5 நாட்களில் சென்னையில், பிரைமரி கான்டெக்ட் என சொல்லப்படும், ஏற்கனவே தொற்று ஏற்பட்டவர்களிடம் இருந்து தொற்று ஏற்படாமல் புதிதாக தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.


தமிழகத்தில் கடந்த 27-ம் தேதி 52 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்தவர்கள் 47 பேர்; இது 90 சதவீதமாகும். அதேபோல், 28-ம் தேதி தமிழகத்தில் அதிகபட்சமாக 121 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 103 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். அதாவது ஒட்டுமொத்த பாதிப்பில் 85 சதவீதமாகும்.

அதேபோல், 29ம் தேதி கண்டறியப்பட்ட 104 பேரில், 94 பேர் சென்னை சேர்ந்தவர்கள். இது 90.3 சதவீதமாகும். 30ம் தேதி கண்டறியப்பட்ட 161 பேரில் சென்னையை சேர்ந்தவர்கள் 138 பேர். இது 85.7 சதவீதமாகும். இந்நிலையில், இன்று தொற்று கண்டறியப்பட்ட 203 பேரில் 176 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இது 86.6 சதவீதமாகும்.

தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 641 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதில், 558 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இது தமிழகத்தில் மொத்த எண்ணிக்கையில் சென்னையில் மட்டும் 87 சதவீதம் என்பது சென்னை மக்களை அச்சமடையச் செய்துள்ளது. இதுவரை சென்னையில் 33,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 3,200 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சென்னையில் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 98 சதவீதத்தினருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்ற தகவலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் 100 பேருக்கு மேல் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp