கொரோனாவிற்கு கண்டுபிடித்த மருந்து என்ன? திருத்தணிகாசலம் அளித்த வாக்குமூலம்

Views : 97

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்ட திருத்தணிகாசலத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி சமூக வலைதளங்களில் திருத்தணிகாசலம் வீடியே ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் போலி சித்த வைத்தியரான திருத்தணிகாசலம் மீது அரசு பிறப்பித்த உத்தரவை மீறி செயல்படுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டம், 505(1)(b)- உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புதல் மற்றும் 153 (A)- பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய் து கடந்த 6 ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக வீடியோ வெளியிட்டு வந்த திருத்தணிகாசலத்திடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை 4 நாட்கள் போலீஸ் கஷ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக திருத்தணிகாசலத்தின் கல்வி சான்றிதழ்கள்? அவர் எங்கு சித்த மருத்துவம் பயின்றார் போன்ற விவரங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.


பின்னர் கொரோனா நோய்க்கு மருந்து இருப்பதாக சொல்லி வீடியோ வெளியிட்டிருந்தன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா நோயை கட்டுபடுத்துவதற்காக என்ன மருந்து கண்டுபிடிக்கப்பட்டது? அந்த மருந்து யாருக்காவது கொடுக்கப்பட்டதா? ஒருவேளை கொடுக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு நோய் சரியானதா? அல்லது இந்த நோயைக் காரணமாக வைத்து பணம் பறிக்கும் வேலையில் திருத்தணிகாசலம் ஈடுபட்டு வந்தாரா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கபசுர குடிநீரும், நிலவேம்பு கசாயமும் நோயைக் கட்டுபடுத்தும். அதையே தன்னிடம் வருபவர்களுக்கு கொடுத்ததாக விசாரணையில் திருத்தணிகாசலம் கூறியுள்ளதாக காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் போலீஸார் விசாரணை நாளையுடன் முடிவடையும் நிலையில் திருத்தணிகாசலத்திடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp