மக்கள் செல்வாக்கு : பிரதமர் மோடிக்கு ஏற்றம்... முதல்வர் பழனிசாமிக்கு இறங்குமுகம் - ஆய்வில் தகவல்

Views : 127

இந்தியாவிலேயே மக்கள் செல்வாக்கு குறைந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடம்பெற்றிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு பணியில் பிரதமர் மோடியின் செயல்பாடு மற்றும் மாநில முதலமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஐ.ஏ.என்.எஸ்-சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது.

அதன்படி, தேசிய அளவில் பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்கு 65 புள்ளி 69 விழுக்காட்டினர் திருப்தி என வாக்களித்துள்ளனர். அதில், 58 விழுக்காட்டினர் அதிக திருப்தியடைந்ததாகவும், 24 விழுக்காட்டினர் திருப்தியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். 16 விழுக்காட்டினர் மோடியின் செயல்பாட்டிற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பாஜக ஆளாத மாநிலங்களில் ஒன்றான ஒடிசாவில் பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்கு 95 புள்ளி 6 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தொற்று பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிராவில் பிரதமர் மோடிக்கு 71 விழுக்காட்டினர் ஆதரவு கிடைத்துள்ளது,

இதேபோல், இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை சந்திக்க இருக்கும் பீகாரில் 58.48 சதவிகிதத்தினரும், அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் மேற்குவங்கத்தில் 60 சதவிகிதத்தினர் மோடியின் செயல்பாட்டிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்,தென் மாநிலங்களான தமிழகத்தில் 32 புள்ளி 15 விழுக்காட்டினரும், கேரளாவில் 32 புள்ளி 89 விழுக்காட்டினரும் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு, கேரளா, கோவா மாநிலங்களில் பிரதமர் மோடியை விட ராகுல்காந்திக்கு அதிக செல்வாக்கு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.அதேநேரம் தேசிய அளவில் பிரதமர் மோடியுடன் ஒப்பிடுகையில் ராகுல்காந்திக்கு 23 விழுக்காட்டினரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.மாநில முதலமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் 97 விழுக்காட்டினர் ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார். சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், கர்நாடக முதலமைச்சர் எடியூர்ப்பாவிற்கு மக்கள் செல்வாக்கு அதிகளவில் உள்ளது. மக்கள் செல்வாக்கு குறைந்த முதல்வர்கள் பட்டியலில் ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கும் அவர்களைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இடம்பிடித்துள்ளனர்,

அதேபோல், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோரும் குறைந்த மக்கள் செல்வாக்கு உடைய முதலமைச்சர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை சமாளிக்க முடியாததால் உலக நாட்டு தலைவர்களின் செல்வாக்கும் அந்நாட்டு மக்கள் மத்தியில் குறைந்திருப்பது இந்த ஆய்வு மூலம் தெரிய வந்திருக்கிறது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp