சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்?

Views : 1957

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 ஆவது முறையாக கோப்பையை கைப்பறியது . சென்னை அணி மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில், அதை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கியது சிஎஸ்கே.கடந்தஆண்டு ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. இதனால் தோனியையும், சென்னை அணியையும் இனி அவ்வளவு தான் என விமர்சனங்கள் குவிந்தன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்றியதில் இருந்து அணியின் கேப்டனாக தோனி இருக்கிறார். கிட்டத்தட்ட 40 வயதாகிவிட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் நடந்தால், அத்துடன் தோனி தன் ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.இதனால் சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விவை ரசிகர்கள் இப்போழுதில் இருந்தே சமூகவலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். தோனிக்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா கேப்டனாக நியமிக்க வாய்ப்பு இருந்தாலும் ச ரெய்னாவுக்கு தற்போது 34 வயதாகிறது. எனவே, நீண்ட காலத்துக்கு அவரால் கேப்னாக இருப்பது என்பதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 32 வயதான ரவீந்தர ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை அணியில் ஆல்ரவுண்டரான பேட்டிங் பவுலிங் பீல்டிங் என அனைத்திலும் கலக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் தோனி போலவே நெருக்கடியான காலக்கட்டத்தில் அணியை கூலாக வழி நடத்தும் திறமை ஜடேஜாவுக்கு இருப்பதாக சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் நினைக்கிறது. நடப்பு தொடரில் சென்னை அணிக்காக சென்னை அணிக்காக ஒரு சதம் 4 அரைசதங்களுடன் மொத்தம் 635 ரன்கள் எடுத்து ஆரஞ்சு நிற தொப்பியை பெற்ற ருதுராஜ் கெய்க்வாடுக்கும் சென்னை அணியின் வருங்கால கேப்டன் லிஸ்டில் இருக்கிறார் என பேச்சும் அடிபட்டுள்ளது. டெல்லி அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் போல இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாடும் கேப்டனாக நியமிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 week ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 3 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

May 06, 2024 - 1 week ago
இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.

தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை