வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மீது வழக்கு!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மீது வழக்கு!

Views : 1893

முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கல்லூரிகள், கல் குவாரி உள்ளிட்ட 28 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் 20 துணைக் கண்காணிப்பாளர்களின் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீஸார் 30 குழுக்களாகப் பிரிந்து திங்கள்கிழமை சோதனை, நடத்தினர்.

முன்னாள் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை (அக். 17) வழக்குப் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலுள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம், மேட்டுச்சாலையிலுள்ள மதர் தெரசா கல்வி நிறுவனங்களில் 10 இடங்கள், மதர் தெரசா அறக்கட்டளை அலுவலகம், திருவேங்கைவாசல், முத்துடையான்பட்டி ஆகிய இடங்களிலுள்ள கல் குவாரிகள், விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் இலுப்பூர் பாண்டிசெல்வம், குரு. ராஜமன்னார், மதியநல்லூர் அன்னவாசல் ஒன்றியக் குழுத் தலைவர் வி. ராமசாமி, மெய்யனம்பட்டி வடிவேல், பழனிசாமி, சிப்காட் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, கோவில்பட்டியில் அதிமுக புதுக்கோட்டை நகரச் செயலர் க. பாஸ்கர், அவரது தம்பி நத்தம்பண்ணை ஊராட்சி மன்றத் தலைவர் பாபு, விஜயபாஸ்கரின் உதவியாளர் நரிமேடு அன்பானந்தம், புதுக்கோட்டை தெற்கு 3ஆம் வீதியில் எஸ்ஏ. சேட்டு, இலுப்பூர் சிவன்கோவில் தெரு குபேந்திரன், இலுப்பூர் சௌராஷ்டிரா தெரு சுப்பையா உள்ளிட்ட 28 இடங்களில் சோதனை நடைபெற்றது.

காலை 7 மணிக்கு ஒரே நேரத்தில் அனைத்து இடங்களுக்கும் நுழைந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், உள்ளே இருந்த யாரையும் வெளியே அனுப்பாமல் வைத்து சோதனையை மேற்கொண்டனர்.

இலுப்பூரிலுள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் விஜயபாஸ்கரின் தந்தை ரா. சின்னதம்பி, தாய் அம்மாகண்ணு, விஜயபாஸ்கரின் அண்ணன் சி. உதயகுமார் உள்ளிட்டோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்தச் சோதனையின்போது, மாவட்டக் காவல் துறையினரும் ஆங்காங்கே பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.



புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளர் பீட்டர் அளித்த புகாரின் பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளர் இமயவரம்பன் பதிவு செய்துள்ள வழக்கு விவரம்;

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர். கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலத்தில் ரூ. 27,22,56,736 மதிப்பில் பல்வேறு இடங்களில் சொத்துகளாக வாங்கியுள்ளனர்.

ராசி புளு மெட்டல்ஸ், கிரீன் லேண்ட் ஹைடெக் புரமோட்டர்ஸ், ஓம்சிறீவாரி ஸ்டோன்ஸ் நிறுவனம், ராசி என்ட்டர்பிரைசஸ், அனையா என்டர்பிரைசஸ், பி இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ், சாய் ஹரிதம் இன்ப்ரா பிரைவேட் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள் பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 3 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 3 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் - சித்தராமையா

Apr 10, 2024 - 2 weeks ago
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் - சித்தராமையா “மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும்” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி கர்நாடகாவில் உள்ள பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள்