வாழைமரம் தென்னைமரம் சிறுகதை

வாழைமரம் தென்னைமரம் சிறுகதை

Views : 1907

வாழைக்கன்று தென்னங்கன்றிடம் கேட்டது,

🌴 ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது.

வாழைக்கன்று தென்னங்கன்றிடம் கேட்டது,

” நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே…??? “

தென்னங்கன்று சொன்னது,
” ஒரு வருஷம் “

“ஒரு வருஷம்னு சொல்றே

ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே…??? எதாச்சும் வியாதியா…???”

கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல சிரித்தது

தென்னங்கன்றோ அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது

ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக இருந்தது

இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றைவிட உயரமாக வளர்ந்துவிட்டது

வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது

தென்னங்கன்றோ எப்போதும் போல சலனமில்லாமல் புன்னகைத்தது

வாழைக்கன்றை நட்டு ஒரு வருடம் ஆவதற்குள்

தென்னங்கன்றைவிட இருமடங்கு உயரமாகி விட்டது

தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை

“கடவுளுக்கு உன்னை மட்டும் பிடிக்காதோ..???

ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே…..!!!

நீ இருக்குற மண்ணில் தான் நானும் இருக்கேன்

உனக்கு கிடைக்கிற தண்ணிதான் எனக்கும் கிடைக்குது

ஆனா பாரு

நான் மட்டும் எப்படி வளந்துட்டேன்

உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல “

என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது

தென்னங்கன்றிடம் புன்னகை தவிர வேறெந்த பதிலும் வரவில்லை

இன்னும் சிறிது காலம் சென்றது

அதிலிருந்து அழகான குலை வெளிப்பட்டது

அது பூவும் காய்களுமாக அழகாக மாறியது

அதனுடைய பெருமை இன்னும் அதிகமானது

இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக் கழித்தது

நல்ல உயரம்

பிளவுபடாத அழகிய இலைகள்

கம்பீரமான குலை

வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது

இப்போது காய்கள் முற்றின

ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்தான்

வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான்

வாழைக்காய்களைத் தட்டிப் பார்த்தான்

தென்னை மரத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை

இதை விட வேறென்ன பெருமை வேண்டும்…???

வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள்

திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான்

முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள

அதன் குலைகளை வெட்டி எடுத்தான்

வாழை மரம் கதறியது

அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது

மரண பயம் வந்துவிட்டது

அது பயந்தபடியே அடுத்த காரியம் நடந்தது

ஆம்…

வாழைமரம் வெட்டி சாய்க்கப்பட்டது

ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது

துண்டு துண்டாக வெட்டப்பட்டுத் தோலுறிக்கப் பட்டது

தென்னை மரம் இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது

அதன் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது

செல்லமே…….

ஒவ்வொரு நாளும் நமக்கும் எத்தனை கேலிகள் இது போல

கவலைப்படாதே

வேகமாக வளர்வதெல்லாம் வேகமாகவே காணாமல் போகும்

புன்னகை செய்

” ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது”

பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன் 🌴

Tags

JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 week ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 3 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

May 06, 2024 - 1 week ago
இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.

தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை