மனைவிகளை மாற்றி கொள்ளும் சோஷியல் மீடியா க்ரூப் லீலைகள்!

மனைவிகளை மாற்றி கொள்ளும் சோஷியல் மீடியா க்ரூப் லீலைகள்!

Views : 1916

கேரளா மாநிலம், கோட்டயம் அருகே உள்ள சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், சங்கனாச்சேரி போலீசில் சமீபத்தில் ஒரு புகார் தந்தார்.. அந்த புகாரில் உள்ள சுருக்கம் இதுதான்: "என்னுடைய கணவர், அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க என்னை வற்புறுத்துகிறார்... இதற்கு உடன்படாததால் என்னை கொடுமைபடுத்துகிறார்... எனது கணவரின் நண்பர்களும், அவர்களின் மனைவியரை இதுபோல மாற்றி கொள்கிறார்கள்... இதற்காக சோஷியல் மீடியாவில் துனியாக குழு அமைத்து செயல்படுகிறார்கள்... அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இப்படி ஒரு புகாரை பார்த்து போலீஸ் அதிகாரிகளே அதிர்ந்து போய்விட்டனர்.. எனவே, உடனடியாக இதை பற்றி விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டனர்... சைபர் கிரைம் போலீசாரும், புகார் கொடுத்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்களின் செல்போன் நம்பர்களை வைத்து விசாரணை ஆரம்பித்தனர்.. அப்போதுதான், இவர்கள் எல்லாம் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு ஸ்பெஷலான குரூப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்..

"கப்பிள் மீட் அப் கேரளா" என்று அதற்கு பெயர்.. இந்த க்ரூப்பில், அவரவர் மனைவிகளை மாற்றி கொண்டு, அந்த மனைவிகளிடம் ஜாலியாக இருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. யாருக்கெல்லாம் இன்னொருத்தர் மனைவி தேவையோ, அவர்கள் இந்த குரூப்பில் உறுப்பினராக இணைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த கும்பல் மெசஞ்சர், டெலகிராம் போன்றவற்றின் மூலமும் உறுப்பினர்களை சேர்த்துள்ளது..

இப்படி மொத்தம் 1000 தம்பதிகள் இந்த குழுவில் இணைந்துள்ளனர்.. கேரளா மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர் 1000 தம்பதிகள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.. இவர்களை தவிர கல்யாணம் ஆகாதவர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இப்படி கல்யாணம் ஆகாதவர்கள், மாற்றான் மனைவியுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்றால், அவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு பணம் வசூலிக்கப்படுமாம்..

இந்த பணம், குரூப் அட்மின் எனப்படும் குழுவை தொடங்கியவர்களுக்கு வருமானமாய் கிடைத்துள்ளது... இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, முதற்கட்டமாக இந்த குழுவை சேர்ந்த 7 பேரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.. இவர்களுடன் தொடர்பில் இருந்த முக்கியமான 25 நபர்களை கண்காணித்தும் வருகிறார்கள். அநேகமாக அவர்களும் கைதாவார்கள் என்று தெரிகிறது.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, "வெளிநாடுகள், மேலை நாட்டு கலாச்சாரத்தில் இதுபோன்ற மனைவிகளை மாற்றும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.. இப்போது இந்த பழக்கம் கேரளாவிலும் பரவி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது... இதில் ஈடுபடுவோர் ஒருத்தரையும் விடாமல் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்... சோஷியல் மீடியாவில் இப்படி க்ரூப்கள் வைத்து மனைவிகளையும், இளம்பெண்களையும் மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் பற்றிய தகவல்களையும் தொடர்ந்து திரட்டி வருகிறோம்.. அவர்களையும் விரைவில் கைது செய்வோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 week ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 3 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

May 06, 2024 - 1 week ago
இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.

தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை