தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் (1952-2023)

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் (1952-2023)

Views : 225

தேமுதிக நிறுவனரான விஜயகாந்த் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விட திணறியதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மரணம்; இறப்பு குறித்து மருத்துவ மனை வெளிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?


நேற்று அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டிருந்தது. விஜயகாந்த மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் வீட்டில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் மரணம் குறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (நிமோனியா) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் அவர் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 1 month ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 4 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 2 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட