அதிமுக ஒன்றுபட வேண்டும், கோடநாட்டில் வி.கே.சசிகலா கண்ணீர் மல்கப் பேட்டி!

அதிமுக ஒன்றுபட வேண்டும், கோடநாட்டில் வி.கே.சசிகலா கண்ணீர் மல்கப் பேட்டி!

Views : 299

அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன் என கோடநாட்டில் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கோடநாடு சென்றனர். 2017-ல் இந்த எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகு சசிகலா இங்கு வராமல் இருந்தார். 7 ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு பங்களாவுக்கு சசிகலா இன்று சென்றடைந்தார். அவருடன் இளவரசியும் சென்றிருக்கிறார். பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வி.கே.சசிகலா; கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார் என நம்புகிறேன் கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்குப் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். விரைவில் அவரது சிலை திறக்கப்படும். அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும்; அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 4 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 3 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 2 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட