இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கியது ஐசிசி

இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கியது ஐசிசி

Views : 195

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி 55 ரன்னில் ஆல்-அவுட் ஆகி மோசமாக தோற்றது அந்த நாட்டு அரசியல் மட்டத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டு இந்த நடவடிக்கைக்கு தடை விதித்தது. இருப்பினும் இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சி ஆதரவுடன் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதில் திடீர் திருப்பமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிரடியாக இடை நீக்கம் செய்து கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி உத்தரவிட்டது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அந்த நாட்டு அரசாங்கத்தின் தலையீடு இருக்கிறது. கிரிக்கெட் அமைப்பு அரசாங்கத்தின் தலையீடு இன்றி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணி ஐசிசி போட்டிகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்களில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படவில்லை. மேலும் தற்போது நடைபெற்று வரும் ஜூனியர் உலகக்கோப்பை தொடர் இலங்கையிலிருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படுவதாக ஐசிசி அறிவித்தது. முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணி மீதான அனைத்து தடைகளையும் உடனடியாக நீக்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இடை நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும், அதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பதையும் உறுதி செய்த பின் அதன் மீதான தடை நீக்கப்பட்டதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

Tags

JOIN IN TELEGRAM

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 4 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 2 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

Apr 14, 2024 - 2 weeks ago
தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல் தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.