எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் நாளை உத்தரவு!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் நாளை உத்தரவு!

Views : 64

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.நீதிபதி சச்சின் தத்தா அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது.தேர்தல் ஆணையத்திலும் பல்வேறு புகார்கள் வழங்கப்பட்டுள்ளன என்று புகழேந்தி தரப்பில் வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி தற்போது என்ன நிவாரணம் வேண்டும் என தெரிவியுங்கள் என்றார். தற்போது பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ளதால், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு அ.தி.மு.க. கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனவும், தேர்தலுக்கான வேட்பாளர் மனுவில் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தனித்தனி புகார்களை தேர்தல் ஆணையத்தில் வழங்கி உள்ளோம். ஆனால் அதன் மீது தேர்தல் ஆணையம் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே அந்த மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தற்போது பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், சின்னம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று புகழேந்தி தரப்பில் கோரப்பட்டது.இதையடுத்து தற்போது அ.தி.மு.க கட்சி இரண்டு அணிகளாக உள்ளதா?அதனால் தான் இரு தரப்பும் அ.தி.மு.க.வை உரிமை கோருகிறீர்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதை தொடர்ந்து அ.தி.மு.க தரப்பு வழக்கறிஞரான பாலாஜி சீனிவாசன் வாதிடும் போது கூறியதாவது:-அ.தி.மு.க என்பது ஒரே அணிதான், எந்த அணிகளும் அ.தி.மு.க.வுக்கு இல்லை.இதை பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. குறிப்பாக என்.சி.பி. கட்சி வழக்கை எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ளலாம், ஏனெனில் யாருக்கு 'மெஜாரிட்டி' உள்ளதோ அவர்களுக்கே கட்சியும், சின்னமும். அதன் அடிப்படையில்தான் இந்த விவகாரத்தை பார்க்க வேண்டும்.

அந்த வகையில் அ.தி.மு.க. கட்சிக்கோ, சின்னத்துக்கோ எந்த பிரச்சனையும் இல்லை.இந்த நபருக்கு ஏதேனும் கோரிக்கை உள்ளதென்றால் அதனை தேர்தல் ஆணையத்திடம் முறையிடலாம். அதில் நியாயம் இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.மேலும் புகழேந்தி ஒரு அடிப்படை உறுப்பினர் கிடையாது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். எனவே அவருக்கு எந்த உரிமையும் இல்லை.அ.தி.மு.க.வின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்து எடுத்துள்ளது. அதேபோல அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பக்கம் உள்ளனர்.எனவே பெரும்பான்மை அடிப்படையில் அ.தி.மு.க. கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. எனவே இந்த விவகாரத்தில் புகழேந்தி வருவதற்கு எந்த உரிமையும் இல்லை.
இவ்வாறு அவர் வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதி இந்த மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 3 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

Mar 28, 2024 - 4 weeks ago
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 3 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்