துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது - அதிமுக கூட்டத்தில் பா.ம.கவை தாக்கிய பிரேமலதா

துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது - அதிமுக கூட்டத்தில் பா.ம.கவை தாக்கிய பிரேமலதா

Views : 126

திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார். இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அதிமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது, கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி. அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். உறுதியாக, இறுதியாக என்றைக்கும் எங்கள் கூட்டணி தொடரும்.முதலமைச்சராக இருந்த போது, எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று, வெள்ளம் போன்ற சூழ்நிலைகளை சிறப்பாக கையாண்டார்.சென்னையில் கடந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, தி.மு.க. அரசு அதை சிறப்பாக கையாளவில்லை. நீட் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.கவால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது.

தங்கத்தின் விலையை குறைப்பேன் என வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா ?தேமுதிக நியாயத்திற்கும், தமர்மத்திற்கும் துணை நிற்கும்.இரண்டு நாட்கள் வரை கூட்டணியில் இருக்கிறோம் என நாடகம் நடத்தியவர்கள், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என கூடாரத்தையே காலி செய்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்.ஆனால் தேமுதிக அப்படி கிடையாது. துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது. துண்ட காணோம்.இவ்வாறு அவர் கூறினார்.


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 3 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 3 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் - சித்தராமையா

Apr 10, 2024 - 2 weeks ago
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் - சித்தராமையா “மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும்” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி கர்நாடகாவில் உள்ள பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள்