எங்களை பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற? - பாஜக நிர்வாகிக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி

எங்களை பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற? - பாஜக நிர்வாகிக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி

Views : 84

மதுரை பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ராம சீனிவாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது திமுகவை மட்டுமில்லாமல் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். அண்மையில் ராம சீனிவாசன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் "அதிமுகவுக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளதாக எடப்பாடி அடிக்கடி கூறுகிறார்.

ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு எந்த தேர்தலில் அதிமுக ஒன்றரை கோடி ஓட்டுகளை வாங்கி உள்ளது? இந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது. மக்களிடம் செல்வாக்கை இழந்துவிட்ட அந்தக் கட்சி பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும்" எனக் கடுமையாகப் பேசியிருந்தார்.இந்நிலையில் இன்று சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் ராம சீனிவாசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், "மதுரையில் பாஜக மாநில பொதுச் செயலாளரும் அக்கட்சி வேட்பாளராகவும் இருக்கும் ராம சீனிவாசன் என்பவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக என்னைப் பற்றிப் பேசியுள்ளார்.இப்போது நடக்கும் மக்களவைத் தேர்தலோடு அதிமுக காணாமல் போகுமாம். ஏய். உன்னைப் போல எத்தனை பேரை பார்த்தது அதிமுக. அதிமுக வரலாறு உனக்கு தெரியுமா?நான் உட்பட இந்த மேடையில் இருப்பவர்கள் 50 ஆண்டு காலமாக இந்த கட்சிக்காக உழைத்தவர்கள். உன்னைப் போல சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல. இரவு பகல் பாராமல் உழைக்கின்ற உழைப்பாளிகள் நாங்கள். மக்களுக்கு சேவை செய்து அரசியல் செய்கின்றோம். உங்களைப் போல வெற்று விளம்பரத்தில் அரசியல் நடத்தவில்லை.கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, அதிக தொண்டர்களை கொண்ட கட்சி என்றால் அதிமுக தான்.

எங்களை பார்த்து 2024ஆம் ஆண்டுக்கு பிறகு அதிமுக இருக்காது என்று சொல்கிறாய். பொறுத்திருந்து பார், இந்த தேர்தலோடு பெட்டி அரசியல் செய்து கொண்டிருக்கு உங்களை போன்றவர்கள் அடையாளம் இன்றி போய்விடுவீர்கள். அது தான் எதார்த்த உண்மை.1998ல் பாஜகவை தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியதே ஜெயலலிதா தான். பாஜகவின் தாமரை சின்னத்தை தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியது அதிமுக தான். உங்களுக்கே அடையாளம் காட்டியது அதிமுக தான். இப்போ எங்களைப் பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற?" என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசினார்.


JOIN IN TELEGRAM

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 3 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

Apr 14, 2024 - 3 weeks ago
தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல் தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் - சித்தராமையா

Apr 10, 2024 - 3 weeks ago
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் - சித்தராமையா “மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும்” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி கர்நாடகாவில் உள்ள பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள்