தமிழ்நாட்டில் 6-7% வரையிலான முக்குலத்தோர் வாக்கு வங்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகளைப் பொறுத்தவரை அதிமுகவிற்கே முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம் இருந்தது . இதற்கான பின்னணியில் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் அந்த சமூகத்தைச் சேர்ந்த வி.கே.சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முக்கியப் பொறுப்புகளில் இருந்ததே காரணம். பாஜகவை எதிர்த்த சசிகலாவும் டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதன் அடிப்படையில் முக்குலத்தோரின் வாக்குகள் சசிகலா, தினகரனை நோக்கியே இருந்தன.