குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பழைய காரில் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஆண்டு லண்டனுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர்.
1950-ம் ஆண்டுகளில் அறிமுகமான அந்த பழைய கார் 73 வருட பாரம்பரியம் கொண்டது. அந்த காரில் பயணம் செய்த குடும்பத்தினர் 16 நாடுகள் வழியாக 13 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சாலை பயணம் சென்று லண்டனை அடைந்துள்ளனர். 2½ மாத பயணம் மேற்கொண்ட அந்த குடும்பத்தினர் கடந்த ஆண்டு அக்டோபரில் லண்டனை அடைந்த போது தங்களது வெற்றிப்பயணம் தொடர்பாக ஒரு வீடியோ தயாரித்து உள்ளனர். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவுடன் தமன் தாக்கூரின் பதிவில், இது மிகவும் உணர்ச்சிகரமான பயணம். 73 நாட்களில் 13 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்துள்ளோம் என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர்கள் பயணத்தின் போது பல்வேறு இடங்களிலும் எடுக்கப்பட்ட காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சிறப்புச் செய்தி
குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
வெள்ளரிக்காய் குளிர்காலத்தில் சாப்பிடலாமா?...
17 minutes ago
வேளாண் துறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ...
47 minutes ago
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு ‘கேக்’ வழங்க 4 நிறுவனங...
1 hour ago