சென்னை:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 100 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும், நீர்மட்டம் 21 அடியை நெருங்குவதாலும் கூடுதலாக உபரி நீர் திறக்க அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏரியின் ஐந்து கண் மதகில் மூன்று செட்டர்கள் வழியாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் மாநில தலைவருமான செல்வபெருந்தகை அதிகாரிகளுடன் சேர்ந்து நேற்று ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின், மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் தண்ணீரை திறந்து விடுகிறீர்கள். நீங்களே மக்கள் பிரதிநிதியாகி விட்டால் எதற்கு அரசு? என பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடிந்து கொண்டார். இச்சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.
சிறப்புச் செய்தி
ஏரி நீர் திறப்பு குறித்து ஏன் தெரிவிக்கவில்லை?: அதிகாரிகளை மிரட்டிய செல்வபெருந்தகை
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
அமைச்சர் முன்னிலையில் காங்கிரஸ் எம்.பி.க்கு ஏற்பட்ட அவமானம் வருத்தம...
8 hours ago
தந்தையின் கடைசி போட்டோவை தவறவிட்ட இந்திய பெண் - பத்திரமாக மீட்டுத் ...
8 hours ago
விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. ஆட்சியில் வேளாண்மைத் துறைச் செயலாளர்...
8 hours ago