சிறப்புச் செய்தி

2026-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வென்ற பெல்ஜியம் விஞ்ஞானி

7 hours ago 8 பார்வைகள்
2026-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வென்ற பெல்ஜியம் விஞ்ஞானி

உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி என 6 முக்கிய துறைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று தொடங்கி தினமும் ஒரு துறைக்கு வரும் 12-ம் தேதி வரை பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன.

நேற்று முதல் கட்டமாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட விஞ்ஞானிகளின் பெயர், ஸ்வீடனின் கரோலின்ஸ்கா கல்வி நிறுவனத்தில் உள்ள நோபல் சபையால் இது அறிவிக்கப்பட்டது. அதன்படி, கார்ல் டீசெரோத், பீட்டர் ஹெகெமன், ஜார்ஜ் நாகல் ஆகியோருக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2026-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஹால்சன் என்பவருக்கு வழங்கப்படுகிறது.

ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு இவர் முக்கிய பங்களிப்பு ஆற்ரினார்.

அமெரிக்காவில் பணியாற்றும் இவர் நியூட்ரினோ தொடர்பான முக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் என்பதற்காக இந்த விருது அளிக்கப்படுகிறது நோபல் கமிட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்