தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம்!

தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார்.

நாளை தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளநிலையில், இந்த நியமனம் வந்துள்ளது.

தென் மண்டல கவுன்சில் என்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை இணைக்கும் அமைப்பாகும்.

மத்திய அரசால் அவ்வப்போது கூட்டப்படும் தெற்கு மண்டல குழு, மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பிற்கு தேவைப்படும் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களை ஒன்றிணைக்கிறது.

முன்னதாக தென் மண்டல கவுன்சிலின் தமிழ்நாடு உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel