சிறப்புச் செய்தி

விமானப்படைத் தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் அஷுதோஷ் தீட்சித் நியமனம்!

4 hours ago 19 பார்வைகள்
விமானப்படைத் தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் அஷுதோஷ் தீட்சித் நியமனம்!

இந்திய விமானப்படையின் 29-வது தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.

விமானப்படைத் தலைமைத் தளபதியான ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் அக்டோபர் 31 உடன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, தற்போது துணைத் தளபதியாகப் பணியாற்றி வரும் தீட்சித் அடுத்த தலைமையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

59 வயதான தீட்சித், 2028 டிசம்பர் 31 வரை இந்தப் பதவியில் நீடிப்பார். 1986 டிசம்பரில் இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் பணியில் சேர்ந்தார். சுமார் 4 தசாப்த கால ராணுவப் பின்னணி கொண்டவர்.

விமானப்படைத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, படைத் தலைமைத் தளபதிகள் குழுவின் தலைவருக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவராகவும் (CISC), மத்திய விமானப்படைத் தளத்தின் தலைமைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

ஒரு சோதனை விமானி மற்றும் விமானப் பயிற்சி பயிற்றுவிப்பாளரான இவர், மிராஜ்-2000, மிக் ரகங்கள், ஜாகுவார் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் உட்பட பல்வேறு போர் விமானங்களை 3,500 மணி நேரத்திற்கும் மேலாக இயக்கிய அனுபவம் கொண்டவர்.

ஆபரேஷன் சஃபேத் சாகர்' (கார்கில் போர்), 'ஆபரேஷன் ரக்ஷக்' மற்றும் 'ஆபரேஷன் சிந்துர்' கோப் இந்தியா ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்