சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரக் குழுப் பட்டியலில் நாஞ்சில் சம்பத்தின் பெயர் இடம்பெறவில்லை. இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் தளத்தில் போனால் போகட்டும் போடா என்ற வரிகளை பதிவிட்டிருந்தார். இது அவர் கட்சியிலிருந்து விலகி போகிறார் என்ற சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் இது உண்மை இல்லை, இது குறித்து சில பொய்களை பரப்பி வருகிறார்கள் என்று பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நாஞ்சில் சம்பத்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
உப்பைப் போல எளிமையானத் தலைவன் தென்றலைப் போல மென்மையான தலைவன் தமிழைப் போல உண்மையான தலைவன் தளபதி முதல்வர் விஜய்
இளைஞர்களின் இதயத்திலும் பெண்களின் பேராதரவிலும் எந்நாளும் வலுவாக திகழ்கின்ற மனசாட்சி உள்ள மக்களாட்சியின் தலைமகன் தளபதி முதல்வர் விஜய்.
அவர்களின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை என் தலைமையும் அறியும் என் மனமும் அறியும்
என்று பதிவிட்டுள்ளார்.