சிறப்புச் செய்தி

குடலில் தொல்லை தரும் புழுக்களை அழிக்க எளிய இயற்கை வைத்திய முறைகள்

11 hours ago 28 பார்வைகள்
குடலில் தொல்லை தரும் புழுக்களை அழிக்க எளிய இயற்கை வைத்திய முறைகள்

அசுத்தமான பழக்கவழக்கங்கள் மற்றும் சுகாதாரமற்ற சூழல் காரணமாக குடலில் புழுக்கள் உருவாகின்றன. இதனால் சரியாக சாப்பிட முடியாமல் போவதுடன், வயிற்றுக் கோளாறுகள் மற்றும் செரிமானப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. குடலில் புழுக்கள் வளரத் தொடங்கினால் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வரை வாழும் தன்மை கொண்டவை. எனவே, ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது குடலைச் சுத்தப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

செயற்கை மாத்திரைகளை அடிக்கடி அல்லது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் எடுத்துக்கொள்வது உடல் நலத்திற்குத் தீங்கானது. அதற்கு மாற்றாக, உடலுக்கு எந்தவித பக்கவிளைவுகளையும் தராத இயற்கையான வழிமுறைகள் மற்றும் கைவைத்தியம் மூலம் குடல் புழுக்களை எளிதில் வெளியேற்றலாம்.

*திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவது, அசுத்தமான தெருக்களிலும் மண் தரையிலும் குழந்தைகள் விளையாடுவது மற்றும் காலில் செருப்பு அணியாமல் நடப்பது.

*உணவு அருந்துவதற்கு முன்பு கைகளைக் கழுவாமல் இருப்பது, குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் மற்றும் நகங்களைச் சுத்தமாகப் பராமரிக்காமல் இருப்பது.

*கொதிக்க வைக்காத சுத்தமற்ற குடிநீரைப் பருகுவது, ஈக்கள் மொய்த்த மற்றும் சாலையோரத் திறந்தவெளி உணவுகளை உட்கொள்வது.

*சமையலுக்குப் பயன்படுத்தும் காய்கறிகளையும் பழங்களையும் தண்ணீரில் நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது.

*வீட்டில் வளர்க்கும் பிராணிகளுடன் விளையாடிய பிறகு கைகளைக் சோப்பு போட்டுச் சுத்தமாகக் கழுவாமல் இருப்பது.

பூண்டில் உள்ள மருத்துவக் குணங்கள் குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்கவல்லது.

செய்முறை: ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் பொடியாக நறுக்கிய பூண்டுத் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும். இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இரு வேளை உட்கொண்டு வர குடல் புழுக்கள் வெளியேறி வயிறு சுத்தமாகும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பூசணி விதைகளில் உள்ள இயற்கைச் சத்துக்கள் குடற்புழுக்களைச் செயலிழக்கச் செய்து வெளியேற்றும்.

செய்முறை: அரை ஸ்பூன் பூசணி விதை பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, இரவில் தூங்குவதற்கு முன்பு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பெரியவர்கள் அரை ஸ்புன்னும், குழந்தைகள் கால் ஸ்புன்னும் எடுத்துக்கொள்ளலாம்.

பப்பாளி விதைகளில் குடலில் உள்ள பூச்சிகளை வேரோடு அழிக்கக்கூடிய காரிசின் என்னும் வேதிப்பொருள் உள்ளது.

செய்முறை: ஒரு ஸ்பூன் பப்பாளி விதையுடன் (சிறியவர்கள் எனில் அரை ஸ்பூன்) தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் வடிகட்டி, தேன் கலந்து வாரம் ஒரு முறை வீதம் நான்கு வாரங்கள் குடித்து வர வயிற்றுப் புழுக்கள் முழுமையாக வெளியேறும்.

வேப்பம் பூவில் உள்ள கசப்புத் தன்மை குடலில் கிருமிகள் மற்றும் புழுக்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.

செய்முறை: அரை ஸ்பூன் நெய்யில் வேப்பம் பூவைச் சேர்த்து வதக்கி, அதனுடன் நீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி மாதம் ஒருமுறை குடித்து வரலாம். முன்னோர்கள் வாரத்திற்கு ஒருமுறை உணவில் வேப்பம் பூவைச் சேர்த்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

*கழிப்பறை சென்றுவந்த பின் கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். நகங்களைச் சுத்தமாகப் வெட்டிப் பராமரிக்க வேண்டும்.

*நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்த நீரை மட்டுமே குடிக்க வேண்டும்.

*காய்கறிகளையும், பழங்களையும் சமைப்பதற்கும் உண்பதற்கும் முன்பு சுத்தமான நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். மீன் மற்றும் இறைச்சியை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும்.

*வெளியில் செல்லும் போது எப்போதும் காலில் செருப்பு அணிந்து செல்வதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்