சிறப்புச் செய்தி

சர்வாதிகாரத்தால் ஜனநாயகத்தின் குரலை ஒடுக்கிவிட முடியாது - கனிமொழி

10 hours ago 16 பார்வைகள்
சர்வாதிகாரத்தால் ஜனநாயகத்தின் குரலை ஒடுக்கிவிட முடியாது - கனிமொழி

டெல்லியில் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற அபிஜித் திப்கே மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோர் காவல்துறையினரால் தடுப்புகாவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அபிஜித் தீப்கேவின் இந்த தடுப்பிற்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டங்களை தெரிவித்துள்ளார்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டத்திற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போராட்ட அறிவிப்பால் நேற்றுய தினமே டெல்லியின் குறிப்பிட்ட பகுதிகளில் இணையசேவை முடக்கப்பட்டும்,20,000க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சூழலில் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி நோக்கி வந்த சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, விமானம்தரையிரங்கும்போது விமானத்திற்குள்ளேயே வைத்து டெல்லி காவல்துறையினரால் தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டார்.

அபிஜித் திப்கேவுடன் சேர்ந்து அவரது கட்சியைச் சேர்ந்த சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோரும் காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அபிஜித் தீப்கேவின் இந்த கைதிற்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடத்தப்பட்ட அமைதியான போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில், விமானத்திற்குள்ளேயே வைத்து சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தடுத்து வைக்கப்பட்ட செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

45 மெட்ரோ நிலையங்களை மூடியும், 250-க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்தும், இணையச் சேவையைத் துண்டித்தும், 25,000 பாதுகாப்புப் பணியாளர்களைக் குவித்தும், அறிவிக்கப்படாத அவசரநிலைக் காலச் சூழலைப் போல டெல்லியை மத்திய அரசு ஒரு கோட்டையாக மாற்றியுள்ளது. 'பாதுகாப்பு' என்ற காரணத்தைக் காட்டி, அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவின் கீழ் உள்ள உரிமைகளை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை என்றால், பிறகு ஜனநாயகத்தில் எஞ்சியிருப்பதுதான் என்ன?

அபிஜீத் தீப்கே உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். சர்வாதிகாரத்தால் ஜனநாயகத்தின் குரலை ஒடுக்கிவிட முடியாது.

என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்