சிறப்புச் செய்தி

நடுவானில் தீ விபத்து ,அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்

9 hours ago 27 பார்வைகள்
நடுவானில் தீ விபத்து ,அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்

டெல்லியில் இருந்து சென்னைக்கு நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் தீவிபத்து ஏற்ப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு வந்த இண்டிகோ விமானத்தில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விமானம் முழுவதும் புகை பரவியதால் பயணிகள் அலறத் தொடங்கியனர். பயணிகளின் பெரும் பதற்ற சூழலுக்கு பிறகு தீயின் நிலமை கட்டுக்குள்கொண்டு வரப்பட்டுள்ளது.பயணி ஒருவரின் பவர்பேங்கில் ஏற்பட்ட தீ காரணமாக இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் ஏற்ப்பட்ட தீ விபத்து காரணமாக அவசர அவசரமாக ஹைதரபாத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்