சிறப்புச் செய்தி

ஆசிய பாரா போட்டிகள்: பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய அணி வெண்கலம்

1 hour ago 14 பார்வைகள்
ஆசிய பாரா போட்டிகள்: பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய அணி வெண்கலம்

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் கடந்த 18 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன. வரும் 24ஆம் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில்,

இந்திய வீரர்கள் மனிஷா ராம்டாஸ் மற்றும் பிரமோத் பகத் ஜோடி வெண்கலம் வென்றது.

இந்தோனேசியாவின் ஒக்டிலா லெனி ராத்ரி மற்றும் ஹிக்மத் ரமதானி ஜோடி 21-16, 13-21, 17-21 என்ற புள்ளிக்கணக்கில் தங்கப்பதக்கம் வென்றது.

முதல் செட்டை வென்றபோதிலும், அடுத்த இரு செட்களில் தோல்வி அடைந்து வெண்கல பதக்கத்தை இந்திய அணி தக்கவைத்து கொண்டது.

இறுதிப் போட்டியில் இந்தோனேசிய ஜோடி, இந்தியாவின் துளசிமதி முருகேசன் மற்றும் நிதேஷ் குமார் ஜோடியை எதிர்கொள்ள உள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்