சிறப்புச் செய்தி

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய 2 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க-வில் இணைவு

1 hour ago 11 பார்வைகள்
ஆம் ஆத்மியில் இருந்து விலகிய
2 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க-வில் இணைவு

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை (40 தொகுதி) வெளியிட்டது.

வேட்பாளர் பட்டியல் வெளியான மறுநாள் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்கள் விலகினார்கள். சேத்தன் சிங், ஜௌரா மஜ்ரா, ஹர்மீத்சிங், பதன்மஜ்ரா ஆகியோர் அந்த கட்சியை விட்டு வெளியேறினார்கள். சேத்தன் சிங் முன்பு அமைச்சராக இருந்தார்.

இந்தநிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான குன்வர் விஜய் பிரதாப் சிங் இன்று பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அமிர்தசரஸ் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்தார். எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகுவது குறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதோடு அவர் ராஜினாமா கடிதத்தையும் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி குன்வர் விஜய் பிரதாப் சிங் கட்சியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிரோமணி அகாலி தளம் தலைவர் விக்ரம் சிங் கைது செய்யப்பட்டபோது அது தொடர்பாக பஞ்சாப் லஞ்ச ஒழிப்பு போலீஸ் எடுத்த நடவடிக்கையை அவர் கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை செயல்பாடுகளை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகிய 2 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான சேத்தன்சிங், ஹர்மீத்சிங் மற்றும் பதவி விலகிய குன்வர் விஜய் பிரதாப் சிங் ஆகியோர் பா.ஜனதாவில் இன்று இணைந்தனர்.

டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலு வலகத்துக்கு 3 பேரும் நேரில் சென்று அந்த கட்சியில் தலைவர்கள் முன்னிலையில் சேர்ந்தனர்.

இது ஆம்ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்