சிறப்புச் செய்தி

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் இறுதிப்போட்டி: பாகிஸ்தான் ‘ஏ’- இலங்கை ‘ஏ’ இன்று பலப்பரீட்சை

14 hours ago 20 பார்வைகள்
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் இறுதிப்போட்டி: பாகிஸ்தான் ‘ஏ’- இலங்கை ‘ஏ’ இன்று பலப்பரீட்சை

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் 'ஏ' அணி, இலங்கை 'ஏ' அணியை எதிர்கொள்கிறது.

அப்துல் சமத் தலைமையிலான பாகிஸ்தான் 'ஏ' அணி லீக் ஆட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, நேபாளம் அணிகளை தோற்கடித்தது. அரை இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பவன் ரத்னாயகே தலைமையிலான இலங்கை 'ஏ' அணி லீக் ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், ஹாங்காங், வங்காளதேசத்தை தொடர்ச்சியாக வென்றது. அரை இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டியை எட்டியது.

தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் வந்துள்ள இவ்விரு அணிகளும் கோப்பையை வசப்படுத்த வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்