சிறப்புச் செய்தி

தொகுதி மறுவரையறை மசோதா: நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த திமுக - காங்கிரஸின் முயற்சி தோல்வி!

5 hours ago 16 பார்வைகள்
தொகுதி மறுவரையறை மசோதா: நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த திமுக - காங்கிரஸின் முயற்சி தோல்வி!

சென்னை ஆழ்வார்பேட்டையில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தியா கூட்டணித் தலைவர்களின் பேச்சுவார்த்தை நிறைவுப் பெற்றது.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து திமுக, தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் தனது நிலைபாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.

நாளை கூடும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் அறிமுகம் செய்கிறது மத்திய பாஜக அரசு. இந்த மசோதாவை ஆதரிப்பதாக திமுக அறிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் மல்லிகார்ஜுனே கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, வேணுகோபால், வழக்கறிஞர் கபில் சிபல், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.பேபி, கர்நாடகா, தெலங்கானா மற்றும் கேரள முதல்வர்கள், முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்