சிறப்புச் செய்தி

தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்க உள்ளதாக தகவல்

13 hours ago 16 பார்வைகள்
தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்க உள்ளதாக தகவல்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெற உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மீண்டும் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவில் மாற்றங்கள் செய்யப்பட்டு, மாநிலங்கள் முழுவதும் மக்களவை இடங்கள் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட உள்ளன.

இதன் மூலம் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகியவற்றின் மக்களவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன.

அதன்படி மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை 39 லிருந்து 59 ஆகவும், கேரளத்தின் எண்ணிக்கை 20 லிருந்து 30 ஆகவும், கர்நாடகத்தின் 28 லிருந்து 42 ஆகவும், ஆந்திர பிரதேசத்தின் எண்ணிக்கை 25 லிருந்து 38 ஆகவும் மற்றும் தெலங்கானா எண்ணிக்கை 17 லிருந்து 26 ஆகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

இந்த திருத்தம் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறையானது, தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு இடையூறாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த மசோதாவில், மொத்த தென் மாநிலங்களின் மக்களவை எண்ணிக்கை 129 லிருந்து 195 ஆக உயர்த்தப்பட உள்ளது.

தென்னிந்திய மாநிலகளான கேரளம், கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சி செய்து வருகிறது.

மேலும் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான ஆதரவு நிலவுகிறது. இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள தொகுதி மறுவரையறையானது, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு சவாலாக அமைந்துள்ளது.

திராவிட முன்னேற்ற கழகத்துடன் கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து வந்த நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.

இதையடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம் செய்யப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில், இந்த தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறினார்.

இதையடுத்து டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆர். ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இன்று 2:00 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்