முன்னாள் ஆளுநரும், பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் அண்ணாமலை குறித்து பற்றி பேசியது இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் கிளப்ப காரணமாக அமைந்தது.
அதைப்போல, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில் அப்போது அமித் ஷா தமிழிசை சௌந்தர்ராஜனை அழைத்து கண்டித்தது போலவும் ஒரு வீடியோ காட்சி வைரலாக பரவியது. இதனையடுத்து, அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தமிழிசை சௌந்தர்ராஜனை எக்ஸ் வலைதள பக்கத்தில் ” அமித் ஷா என்னை மேடையில் இருக்கும்போது அழைத்து தேர்தலுக்குப் பிந்தைய பணிகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி கேட்டார்.
நேரமின்மை காரணமாக, மிகுந்த அக்கறையுடன் அரசியல் பணிகளைத் தீவிரமாக செய்யுமாறு என்னை அறிவுறுத்தினார். தேவையற்ற வதந்திகள் பரவுவதால் நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்” என விளக்கம் கொடுத்து இருந்தார். இருப்பினும், தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியது பற்றி அண்ணாமலை தரப்பில் தொடர்கள் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தும் வந்தார்கள்.
இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் அண்ணாமலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் வீட்டிற்கு சென்று சந்திப்பு நடத்தி இருக்கிறார். வீட்டில் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அண்ணாமலை கூறியதாவது ” இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது” என அண்ணாமலை கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
திருமாவளவன்
அண்ணாமலை
அன்புமணி
அதிக வெயில்
கூட்ட நெரிசல்
தண்ணீர் வசதி இல்லாமை
திட்டமிடல் இல்லாமை
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அரியானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அரியானாவில் சட்டபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அரியானாவில் மொத்தமுள்ள 90
தமிழ்நாடு பாஜக மூத்த தலைவரும் தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தொல்.திருமாவளவன் நடத்திய மாநாட்டில் தனக்கு காந்தியின் கொள்கைகள் பிடிக்காது. அவர் இந்து மதத்தில் தீவிரமாக இருந்தவர். சாகும்போது கூட ஹரே ராம் என்று கூறியவர்
சென்னை: செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. இதை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது தியாகம் பெரிது என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி பா.ஜனதா மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை கூறியதாவது:- செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறியதே தி.மு.க.தான். அவர்கள் போட்ட வழக்கின் நீட்சிதான் அமலாக்கத்துறை கைது செய்தது.
டீ குடிக்க கூப்பிட்டவரின் மண்டையை பீர் பாட்டிலால் பொளந்த கணவன் மனைவி!
பீதியை கிளப்பிய திருச்சி விமானம்.. பத்திரமாக தரையிறங்கியது
141 பயணிகளின் நிலை என்ன? உலகில் அதிகம் பேரால் டிராக் செய்யப்படும் திருச்சி விமானம்!
Vintage Ultimate Star Thala Ajith Is Back in Good Bad Ugly
வேட்டையன் முதல் நாள் வசூல்! vettaiyan movie day 1 box office collection
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது! - உதயநிதி ஸ்டாலின்
மனைவியை கணவன் வன்புணர்வு செய்வது குற்றமாகாது - மத்திய அரசு தடாலடி
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!