Tamil News & polling
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101). எளிமை யின் அடையாளமாக கருதப்பட்ட நல்லகண்ணு, சென்னை யில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு (2025) மே மாதம் 9-ந்தேதி திடீரென நல்ல கண்ணு தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் மாலை யில் வீடு திரும்பினார்.
இதனையடுத்து அடிக்கடி உடல்நலக்குறைவு காரணமாக நல்லகண்ணு அவ்வப்போது ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி மீண்டும் சிகிச்சைக்காக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு கடந்த 23-ந் தேதி உடல்நி லையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து. அவருக்கு 'வெண்டிலேட்டர்' உத வியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ. இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், தமிழ்நாடு நாடார் சங்கத்தலைவர் முத்து ரமேஷ் நாடார். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், நடிகர் செந்தில், இயக்குனர் கவு தமன் உள்ளிட்டோர் நல்லகண்ணு உடல்நலம் குறித்து நேரில் வந்து நேற்று நலம் விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில், அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நல்லகண்ணுவின் முக் கிய உடல் உறுப்புகள் செயலிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துவிட்டதாக நேற்று மதியம் ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது.
நல்லகண்ணு உயிரிழந்த செய்தி அறிந்ததும், மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து உடனடியாக நல்லகண்ணுவின் உடல் 'எம்பாமிங்' செய்யப்பட்டது. பின்னர், ஆஸ்பத்திரியில் இருந்து தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமாக பாலன் இல்லத்திற்கு தொண்டர்கள் புடைசூழ நல்லகண்ணுவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலிக்காக நல்லகண்ணுவின் உடல் இன்று மாலை 3 மணி வரை வைக்கப்படுகிறது. இதற்கிடையே நல்லகண்ணுவின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பொதுமக்களின் அஞ்சலி மற்றும் அரசு மரியாதைக்கு பின்னர் நல்லகண்ணுவின் உடல் ஊர் வலமாக சென்னை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவருடைய உடல் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்தது. மேலும், ஒரு வாரத்திற்கு கட்சியின் கொடி அரை கம்பத்திற்கு பறக்கவிடப்படும் எனவும் கூறியுள்ளது.
தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ள நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு எ.வ.வேலு, மற்றும் எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் நேற்று மாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும், நல்லகண்ணுவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகி கள், தொண்டர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இதேபோல் நல்லகண்ணு உடலுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நேற்று இரவு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் என நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ, தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,அமைச்சர் அன்பில் மகேஸ், தமாக தலைவர் ஜி.கே.வாசன், இயக்குநர் வெற்றிமாறன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நடிகர் கார்த்தி,ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
* இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:-
நல்லவராக, நேர்மையாக இருந்தால் மதிப்பும், மரியாதையும் தானாக வரும் என்பதற்கு எடுத்துக்காட்டு நல்லகண்ணு என்றார்.
* இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறுகையில்,
நல்லகண்ணு அய்யா மக்களுக்கு ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அவருக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்றார்.
* இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் கூறுகையில்,
நூறு ஆண்டுகளுக்கு மேல் அவர் வாழ்ந்தார் என்பது நிறைவு அளிக்கிறது என்றார்.
* இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகையில்,
யாரும் வெறுக்க முடியாத மனிதர்; எளிமையின் மறுபெயர் என்றார்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக BJP கனமழை தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran Tamil Nadu எடப்பாடி பழனிசாமி திருமாவளவன் ADMK AIADMK AMMK மு.க.ஸ்டாலின் MK Stalin டிடிவி தினகரன் Thirumavalavan Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் செங்கோட்டையன் சீமான் PMK தமிழ்நாடு Edappadi Palaniswami Sengottaiyan Seeman பாமக முக ஸ்டாலின் சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை Congress Tamilaga Vettri Kazhagam Nellai உதயநிதி ஸ்டாலின் Thoothukudi நெல்லை தமிழகம் காங்கிரஸ்