டி20 உலகக் கோப்பையில் கில்கிறிஸ்ட் சாதனையை உடைத்த ரிஷப் பண்ட்.. புதிய உலக சாதனை

By Admin | Published in விளையாட்டு செய்திகள் at ஜூன் 21, 2024 வெள்ளி || views : 569

டி20 உலகக் கோப்பையில் கில்கிறிஸ்ட் சாதனையை உடைத்த ரிஷப் பண்ட்.. புதிய உலக சாதனை

டி20 உலகக் கோப்பையில் கில்கிறிஸ்ட் சாதனையை உடைத்த ரிஷப் பண்ட்.. புதிய உலக சாதனை

இந்திய கிரிக்கெட் அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பார்படாஸ் நகரில் ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 53, ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஆப்கானிஸ்தான் தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஓமர்சாய் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் சூப்பர் 7 சுற்றையும் இந்தியா வெற்றிகரமாக துவங்கியுள்ளது.

ரிஷப் பண்ட் சாதனை:
முன்னதாக இந்தப் போட்டியில் பேட்டிங்கில் அதிரடியாக 4 பவுண்டரியை பறக்க விட்டு 20 (11) ரன்களில் அவுட்டானார். அத்துடன் விக்கெட் கீப்பராக ரஹமனுல்லா குர்பாஸ், குல்பதின் நைப், நவீன்-உல்-ஹக் ஆகியோர் கொடுத்த கேட்ச்களையும் அவர் கச்சிதமாக பிடித்தார். இதையும் சேர்த்து இந்த உலகக் கோப்பையில் அவர் மொத்தமாக 4 போட்டிகளில் 10* கேட்ச்கள் பிடித்துள்ளார்.

இதன் வாயிலாக ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இதற்கு முன் 2007 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் 9 கேட்ச்களை பிடித்துள்ளார். அதே போல 2021இல் ஆஸ்திரேலியாவின் மேத்தியூ வேட், 2022இல் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், 2022இல் நெதர்லாந்தின் ஸ்காட் எட்வர்ட்ஸ், 2022இல் இலங்கையின் தசுன் சனாகா ஆகியோரும் தலா 9 கேட்ச்கள் பிடித்துள்ளனர்.

தற்போது அவர்களை முந்தியுள்ள ரிசப் பண்ட் புதிய உலக சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். 2021 டி20 உலகக் கோப்பையில் சுமாரான ஃபார்மில் இருந்ததால் தேர்வு செய்யப்படாத அவர் 2022 டி20 உலகக் கோப்பையில் காயத்தால் தேர்வாகவில்லை. ஆனால் இந்த வருடம் காயத்திலிருந்து குணமடைந்த அவர் 2024 ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடினார்.

அதனால் முதல் முறையாக தேர்வான ரிஷப் பண்ட் தனது முதல் டி20 உலகக் கோப்பையிலேயே இப்படியொரு அற்புதமான சாதனையைப் படைத்து கம்பேக் கொடுத்துள்ளார். அத்துடன் லீக் சுற்றில் சவாலான நியூயார்க் பிட்ச்சில் விராட் கோலி போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் தடுமாறிய வேளையில் 42 ரன்கள் விளாசிய அவர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற உதவினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

2024 T20 WORLDCUP 2024 டி20 உலக கோப்பை IND VS AFG INDIAN CRICKET TEAM MOST CATCHES RISHABH PANT ஆடம் கில்கிறிஸ்ட் இந்திய அணி ரிஷப் பண்ட்
Whatsaap Channel
விடுகதை :

அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?

விடுகதை :

அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?

விடுகதை :

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

கனமழை எதிரொலி : திருநெல்வேலி, தூடித்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி : திருநெல்வேலி, தூடித்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு விடுமுறை

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு

ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

prev whatsapp Twitter facebook next