INDIAN 7

Tamil News & polling

வெற்றிக்காக நடித்த ஆப்கானிஸ்தான் வீரர்.. ஆஸ்கார் கொடுக்கலாம் போலயே கலாய்த்த அஸ்வின்.. நடந்தது என்ன?

25 ஜூன் 2024 07:24 AM | views : 711
Nature

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேச மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளை வெளியேற்றி ஆப்கானிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக ஜூன் 25ஆம் தேதி செயின் வின்சென்ட் நகரில் நடைபெற்ற கடைசி சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 115/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ரஹமனுல்லா குர்பாஸ் 45 ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து மழையால் 19 ஓவரில் 114 ரன்கள் என்ற புதிய இலக்கை துரத்திய வங்கதேசம் சுமாராக பேட்டிங் செய்து 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்து வெளியேறியது.


அந்த அணிக்கு அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 54* ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரசித் கான், நவீன் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் முதல் முறையாக ஐசிசி தொடரின் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் புதிய சாதனை படைத்தது. முன்னதாக இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் மழை அவ்வப்போது வந்து ஆப்கானிஸ்தானுக்கு சோதனை கொடுத்தது.

குறிப்பாக 12வது ஓவர் வீசிக் கொண்டிருக்கும் போது மழை வருவது போல் தெரிந்தது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி வங்கதேசத்தை விட ஆப்கானிஸ்தான் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. அதன் காரணமாக ஃபெவிலியனில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் ட்ராட் எதையாவது செய்து போட்டியை கொஞ்சம் மெதுவாக்குங்கள் என்று சைகையில் ஆலோசனை வழங்கினார்.

அதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு பார்த்த ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதின் நைப் உடனடியாக தம்முடைய தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு காயமடைந்தது போல் அப்படியே களத்தில் விழுந்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி மருத்துவ குழுவினர் அவரை சோதித்ததால் சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது. அதைப் பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் கால்பந்து போல இவரை சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றுங்கள் என்று ட்விட்டரில் கலாய்த்தார்.


தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் குல்பதின் நைப் உண்மையாக காயடைந்துள்ளேன் என்பதை நடுவர்களுக்கு காட்டுவதற்காக பெவிலியன் சென்று அமர்ந்து கொண்டார். ஆனால் போட்டி முடிந்ததும் அவர் தான் முதல் ஆளாக வெறித்தனமாக ஓடி வந்து ஆப்கானிஸ்தானின் வரலாற்று வெற்றியை கொண்டாட்டினார். அதை பார்க்கும் ரசிகர்கள் இவருக்கு ஆஸ்கார் விருதை கொடுக்கலாம் போல என்று கிண்டலடிப்பதுடன் நாட்டுக்காக இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தியதற்கு பாராட்டையும் தெரிவிக்கின்றனர்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்